உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தவாரிக்கு வெள்ளை குதிரையில் புறப்பட்ட வீரஅழகர்

தீர்த்தவாரிக்கு வெள்ளை குதிரையில் புறப்பட்ட வீரஅழகர்

மானாமதுரை:மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரமோற்ஸவ விழாவில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீரஅழகர் வெள்ளைக்குதிரை வாகனத்தில் பட்டத்தரசி மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரமோற்ஸவ விழா கடந்த 19 ந்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் 24ந் தேதியும்,தேரோட்டம் 27ந் தேதியும் நடைபெற்றது. நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக வீரஅழகர் வெள்ளைக்குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து கிளம்பினார்.அவரை  பட்டத்தரசி கிராமத்தார்கள் மேள, தாளங்கள் முழங்க வரவேற்று அழைத்துச் சென்றனர். இன்று உற்ஸவசாந்தியோடு விழா நிறைவு பெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !