தேசிகர் கோவிலில் அன்னகூடை உற்சவம்
ADDED :2632 days ago
காஞ்சிபுரம் : தேசிகர் கோவிலில், அன்னகூடை உற்சவம், நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் விளக்கொளி பெருமாள் கோவிலில் அமைந்துள்ள தேசிகர் சன்னதியில், நேற்று காலை, அன்னகூடை உற்சவம் நடைபெற்றது.முன்னதாக, விளக்கொளி பெருமாள், மரகதவல்லிதாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின் தேசிகர், வரதராஜப்பெருமாள் கோவில் வரை, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேசிகர் சன்னதியில் பெருமாள், தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னகூடை உற்சவத்தில், தயிர்சாதம், சாம்பார் சாதம், பொங்கல், கதம்ப சாதம், லட்டு போன்றவை சுவாமிக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.