நாகதேவி அம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
ADDED :2632 days ago
உடுமலை;உடுமலை, பழனியாண்டவர் நகர், நாகதேவி அம்மன் கோவிலில், திருவிளக்கு வழிபாடு நடந்தது.உடுமலை, நாகதேவி அம்மன் கன்னிமார் கருப்பராயன் கோவிலில், ஆடிவெள்ளியையொட்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில், பூஜை மாலையில் நடந்தது. பெண்கள், திருவிளக்கு ஏற்றி, மலர்கள் துாவி, மந்திரங்கள் கூறி பூஜை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.