மின் விளக்கால் ஜொலிக்கும் காஞ்சிபுரம் கோவில்கள்
ADDED :2629 days ago
காஞ்சிபுரம்: இரவில் வண்ண மயமாக ஜொலிக்கும் வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள ஒன்பது கோவில் கோபுரங்களில், மின் விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது. காஞ்சிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வசதியை மேம்படுத்த, 2015ல், மத்திய அரசு, பிரசாத் திட்டத்தை அறிவித்தது.இத்திட்டத்தில், காஞ்சிக்கு வரும், சுற்றுலா பயணியரின் வாகனங்கள் நிறுத்த தனி இடம், இலவச, வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளன.மேலும், காஞ்சிபுரம் நகரில் உள்ள முக்கிய கோவில்களில், வண்ண விளக்குகள் பொருத்தி, இரவில் ஜொலிக்க வைக்க திட்டமிடப்பட்டது. இந்த மின் விளக்குகள், பல வண்ணங்களில் நிறம் மாறி, மாறி மிளிரும். அதன்படி, குமரகோட்டம், காமாட்சியம்மன், கச்சபேஸ்வரர், வைகுண்டபெருமாள், ஏகாம்பரநாதர் உள்ளிட்ட கோவில்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு, சோதனை செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.