உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பகவான் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம்

சனி பகவான் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு, நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிமற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா சால்வை அணிவித்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர். பின் சனி பகவானுக்கு தீபம் ஏற்றி சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !