உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா

நாகாத்தம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா

கும்மிடிப்பூண்டி: நாகாத்தம்மன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா, நேற்று நடைபெற்றது. கவரைப்பேட்டை உத்திரக்குளம் பகுதியில் அமைந்துள்ள, நாகாத்தம்மன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா, நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றன. பின், அம்மனுக்கு கூழ் ஊற்றல், ஊர் கூடி பொங்கல் வைத்தல், அலகு போடுதல், கும்பம் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. கவரைப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நாகாத்தம்மனை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !