வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியாணை கணபதிக்கு சிறப்பு பூஜை
ADDED :44 minutes ago
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அவ்வையாருக்கு அருள் பாலித்த பெரியானை கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், அலங்காரம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.