உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ்மாம்பட்டு கோவிலில் ஆடி பவுர்ணமி ஹோமம்

கீழ்மாம்பட்டு கோவிலில் ஆடி பவுர்ணமி ஹோமம்

செஞ்சி: செஞ்சி தாலுகா, கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு அம்மச்சார் அம்மன், செல்வ வினாயகர், சீனுவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காலை 7:00 மணிக்கு அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து கலசாபிஷேகமும் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, பத்மினிதேவி மூர்த்தி, மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் மூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாலை அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !