வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் முத்துப்பல்லக்கில் வீதியுலா
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இரவு நேரத்தில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தார். கடந்த ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் ஆடித்திருவிழா இன்றிரவுடன் நிறைவடைகிறது.
நாள்தோறும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான ஜூலை 25ல் திருக்கல்யாணம், ஜூலை 27–ல் தேரோட்டம் நடந்தது. திருவிழாவில் இரவு நேரத்தில் பெருமாள் பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்ட பெருமாளை நான்கு ரத வீதிகளிலும் காத்திருந்த பக்தர்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிப்பட்டனர். பின்னர் அதிகாலை சுவாமி சன்னதி திரும்பினார். விழா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறையினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.