விநாயகர் உண்டியலில் ரூ.69.06 லட்சம்
ADDED :2799 days ago
நகரி: காணிப்பாக்கம், விநாயகர் கோவில் உண்டியலில், 20 நாட்களில், ௬9.06 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரைத் தரிசித்துச் செல்கின்றனர். பணம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை, காணிக்கையாக உண்டியலில் செலுத்தினர். கடந்த, 20 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி பூர்ணசந்திர ராவ் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 69.06 லட்சம் ரூபாய், 100 கிராம் தங்கம், 475 கிராம் வெள்ளி மற்றும் 6,079 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன.