சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சப்தாவர்ண பல்லக்கு
ADDED :2627 days ago
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் கடந்த 7 நாட்களாக நடந்து வந்த சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா சப்தாவர்ண பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இவ்விழா ஜூலை 23 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் திருக்கல்யாணம், 6ம் நாள் தேரோட்டம் நடந்தது. இறுதிநாளில் சுவாமி சப்தாவர்ண பல்லக்கில் எழுந்தருளி விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமிக்கும் தாயார்களுக்கும் திருமஞ்சன வழிபாடு நடந்தது. மாலையில் சுவாமி தேவியருடன் சப்தாவர்ண பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களிடமிருந்து விடைபெற்றார். மீண்டும் கோயிலை வந்தடைய மைய மண்டபத்தில் மூவருக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர்நாராயணன், நிர்வாகிகள், கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.