சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
சிதம்பரம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், செடல்போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோவிலில் ஆடி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் இரவு மாரியம்மன் வீதியுலாவும் நடந்தது. ஆடி தீமிதி உற்சவத்தையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலில் மாவிளக்கு வழிபாடு, அங்கப்பிரதட்சணம், தொட்டில் கட்டி இழுத்தல், அலகு குத்தி கோவில் வலம் வருதல் என ஆயிரக்கனக்கான பக்தர்கள் நேரத்திக் கடன் செலுத்தினர். காலை ஏராளமான பக்தர்கள் காவடி, விமான காவடி போன்ற பல்வேறு விதமான காவடிகள் எடுத்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமார், அம்பேத்கார், வீரமணி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மாலை நடந்த தீமிதியையொட்டி பஸ் நிலையம் மூடப்பட்டு கீழவீதியில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டது.