வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி விழா
ADDED :2626 days ago
திருப்போரூர்: நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், 59ம் ஆண்டு ஆடிப்பெருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 59ம் ஆண்டு ஆடிப்பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவை ஒட்டி, காலை, 4:00 மணிக்கு, மங்கள இசையும், 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 சங்கு அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, 308 பால்குட விழா, திருமண்டப திருக்குளத்திலிருந்து கொண்டுவந்து உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு கூட்டு வழிபாடு தீப துாப ஆராதனையும் நடந்தது. மாலை ஊஞ்சல் சேவையும், இரவு அம்மன் வீதி உலா வைபவமும் நடந்தது. இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சின்னையா, மரகதம் எம்.பி., உட்பட பலர் பங்கேற்றனர்.