முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா
ADDED :2626 days ago
விருதுநகர் : விருதுநகர் ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயிலில் 29 ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்றிரவு 8:00 மணி அளவில் காப்பு கட்டி முளைப்பாரி போடும் நிகழ்ச்சி நடந்தது. ஆக., 3ல் மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஆக., 5ல் காலை 7:31 மணிக்கு பால்குடம், தீர்த்தம், சந்தனக்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இதனுடன் 108 சங்காபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆக., 6 ல் தீச்சட்டி எடுத்தல், பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுத் தலைவர் மாரியப்பன், செயலாளர் சுப்பையா செய்து வருகின்றனர்.