திம்மராஜம்பேட்டை கங்கையம்மன் கோவிலில் ஆடி விழா
ADDED :2626 days ago
திம்மராஜம்பேட்டை: திம்மராஜம்பேட்டை கங்கையம்மன் கோவிலில், ஆடி திருவிழா கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை கிராமத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி திருவிழா நடைபெறும். நேற்று முன் தினம் ஆடி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை, திம்மராஜம்பேட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.