மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2626 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். ஆடிக்குண்டம் விழா 17ல் பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தன. 22ல் கொடியேற்றப்பட்டது. 24ம் தேதி அதிகாலை, 3:00க்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, 6:00க்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நேற்று 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (31ல்) மறுபூஜை நடைபெற உள்ளது.