உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயேந்திரர் ஜெயந்தி விழா: பக்தர்கள் பரவசம்

ஜெயேந்திரர் ஜெயந்தி விழா: பக்தர்கள் பரவசம்

திருப்பூர் : திருப்பூரில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், காஞ்சி காமகோடி, 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது.திருப்பூர் வாயக்கால் தோட்டம் காமாட்சியம்மன் கோவிலில், நடந்தது கோவை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் தாளாளர் தனலட்சுமி ஜெயச்சந்திரன், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் வழங்கினார். ப்ரஹ்மஸ்ரீ உடையாளூர் கல்யாணராம பாகவதர், குரு சமர்ப்பணம் என்ற தலைப்பில் சங்கீர்த்தனம் வழங்கினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !