ஆத்துரை அம்மனுக்கு 108 பால்குட ஊர்வலம்
ADDED :2740 days ago
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த, ஆத்துரை கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடி மாதங்களில், பால் குட ஊர்வலம் எடுத்து, பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, கிராம பெண்கள், 108 பால்குடங்களை தலையில் சுமந்தபடி, ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பாலபி?ஷகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், காளி அம்மனை தரிசித்தனர்.