பிரசாதம் இது பிரமாதம்
மைதா சீடை
தேவையான பொருட்கள்
மைதா – -1 கப்
பொரிகடலை - – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - – 3 டீஸ்பூன்
எள் - – 1 டீஸ்பூன்
சீரகம் - – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா– 1/4 டீஸ்பூன்
உப்பு - – தேவையான அளவு
எண்ணெய் - – தேவையான அளவு
செய்முறை: ஒரு வெள்ளைத் துணியில் மைதா மாவை போட்டு கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். அதனை இறக்கி, ஒரு தட்டில் போட்டு கையால் உதிர்த்து விடவும். பின் அதை சல்லடை கொண்டு சலிக்கவும். பின்பு மிக்சியில் பொரிகடலையை பொடி செய்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா, பொரிகடலை மாவு, உருக வைத்த வெண்ணெய், சீரகம், எள், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதை சிறுசிறு சீடையாக உருட்டவும். வாணலியை எரியும் அடுப்பில் வைத்து, அதில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள சீடைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.