உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

* ஜூலை 28 ஆடி 12: திருவோண விரதம், தெற்காழ்வான் திருநட்சத்திரம், அழகர்கோவில் கள்ளழகர் சாத்துமுறை, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தர்ராஜ பெருமாள் சப்தாவர்ணம், சாத்தூர் வெங்கடேசர் தோளுக்கினியானில் பவனி, உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசர், ஸ்ரீவில்லிபுத்தூர்  பெரிய பெருமாள் புறப்பாடு.
* ஜூலை 29 ஆடி 13: திண்டுக்கல் வடமதுரை சவுந்தர்ராஜர் முத்துப்பல்லக்கு, கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்
* ஜூலை 30 ஆடி 14: சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் அன்ன வாகனம், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தர்ராஜ பெருமாள் கருட வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.
* ஜூலை 31 ஆடி 15: சங்கடஹர சதுர்த்தி விரதம், சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனம், வடமதுரை சவுந்தர்ராஜர் விடையாற்று உற்ஸவம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 1 ஆடி 16: சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 2 ஆடி 17: சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* ஆகஸ்ட் 3 ஆடி 18: ஆடிப் பெருக்கு, நதிக்கரைகளில் புனித நீராடுதல், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கொடியேற்றம், ராமேஸ்வரம் சேதுமாதவர் சன்னதிக்கு விநாயகர் எழுந்தருளல், சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !