புனிதமான வெள்ளிக்கிழமை
ADDED :2670 days ago
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து வேளை தொழுகை நடத்துவார்கள். அன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளார் நபிகள் நாயகம். “வெள்ளிக்கிழமையன்று குளித்து உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். முழுத்தூய்மையுடன் இருக்கும் பழக்கத்தை பேணி வாருங்கள். எவரேனும் வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வந்தால், அவர் குளித்து விட்டு வரட்டும். வாரத்தில் ஒரு முறையாவது முஸ்லிம் தன் தலையையும், உடலையும் கழுவி குளித்துக் கொள்வது இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமையாகும். பருவமடைந்த ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமை குளித்து விட வேண்டும். இயன்றால் நறுமணம் பூசிக்கொள்ளவும் வேண்டும்,” என்று அவர் சொல்கிறார்.