நவக்கிரகங்களின் தமிழ் பெயர்கள்!
ADDED :2737 days ago
ஆரோக்கியம் பெற சூரியனையும், புகழ் பெற சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவு பெற புதனையும், ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவின்மை பெற வெள்ளியையும், சந்தோஷம் மற்றும் ஆயுள் பெற சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும்,குலம் அபிவிருத்தியடைய கேதுவையும் வணங்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இத்தகைய நவக்கிரகங்களின் தமிழ் பெயர்கள்:
அறிவன் - புதன்
கங்கன் - சுக்கிரன்/ வெள்ளி
சோமன் - திங்கள் / சந்திரன்
சீலன் - வியாழன் / குரு
கதிரவன் - ஞாயிறு/ சூரியன்
நிலமகன் - செவ்வாய்/ அங்காரகன்
செந்நாகன் - கேது
காரி - சனி
கருநாகன் - இராகு.