கடம்பவன முருகன் கோவிலில் 5ல் ஒய்யாலி சேவை
கடம்பத்துார்; கடம்பத்துாரில் அமைந்துள்ள கடம்பவன முருகன் கோவிலில், 4ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, 5ம் தேதி, ஒய்யாலி சேவை நடைபெறவுள்ளது. கடம்பத்துார் அடுத்த, வெண்மனம்புதுார் பகுதியில் அமைந்துள்ளது, கடம்பவன முருகன் கோவில். இங்கு, 5ம் தேதி, 4ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, 3ம் தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமமும், சண்முக ஹோமமும் நடைபெறும். காலை, 10:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். மறுநாள், காலை, 9:30 மணிக்கு சங்காபிஷேகம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிக்கிருத்திகை விழா, 5ல் கொண்டாடப்படவுள்ளது. அன்று காலை, 9:30 மணிக்கு, சூரியம்மன் கோவிலிலிருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு, காலை, 10:00 மணிக்கு கடம்பவன முருகனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும். பகல், 12:00 மணிக்கு கடம்பவன முருகனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். பின், மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத கடம்பவன முருகனுக்கு ஒய்யாலி சேவையும் நடைபெறும்.