ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
வில்லியனுார் : வில்லியனுார் ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. வில்லியனுார் மார்க்கெட் வீதியில் உள்ள தேவி ஏழை மாரியம்மன் கோவில், 90ம் ஆண்டு செடல் பிரமமோற்சவ விழா கடந்த 23ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வரும் விழாவில், ஒவ்வொரு நாளும் உற்சவதாரர்களால் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடைபெறுகிறது. பொது உற்சவமாக நேற்று காலை 9:00 மணியளவில்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12:00 மணியளவில் பாற்சாகை வார்த்தலும், மாலை 4:30 மணியளவில் செடல் உற்சவம் நடந்தது. மாலை 6:30 மணியளவில் கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து கும்பம் படையல் நடந்தது. இரவு 8:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட மூன்று புஷ்ப தேரில் சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. இன்று (1ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.