உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் ஆடிபெருக்கு விழா

ராமநாதபுரத்தில் ஆடிபெருக்கு விழா

பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் மற்றும் சந்தனகருப்பு சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழா, ஜூலை 25 காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம், கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும்சிறப்பு அலங்காரம், பூஜை நடந்து வருகிறது. ஆக., 2 அன்று மாலை6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜையும், நேற்று காலை விநாயகர் அபிேஷகம் நிறைவ டைந்து, தொடர்ந்து பக்தர்கள் பலரும் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 10:00 மணிக்கு அபிேஷகம் நிறைவடைந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 5:00 மணிக்கு அக்னிச்சட்டி எடுத்தும், இரவு 8:00 மணிக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கிராமியகலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

* பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி,பெண்கள் பலரும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்குவழங்கினர்.நேற்று ஆடி வெள்ளிமற்றும் ஆடிப்பெருக்கையொட்டி, புதுமணத்தம்பதிகள் கோயிலில்தாலியை பெருக்கி கட்டிக்கொண்டனர்.தொடர்ந்து பல அமைப்பினர் கோயிலில் கூழ் காய்ச்சிபக்தர்களுக்கு வழங்கினர். காலை 11:30 மணிக்கு அம்மனுக்குபாலாபிேஷகம் நடந்தது. பெரும்பாலானோர் விளக்கு ஏற்றிவழிபாடு நடத்தினர்.பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்குபக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர். அங்கு மாவிளக்குஏற்றியும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வாலிநோக்கம்:-ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில்ஆடி 18ம் பெருக்கு விழாவை முன்னிட்டுகோயில் வளாகத்தில் காலை 9:30 மணிக்கு 1008 பெண்கள் பங்கேற்றசுமங்கலி பூஜை நடந்தது.மூலவர், உற்ஸவ மூர்த்திகளுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகளைகோயில் குருக்கள் சேகர், சந்தோஷ் செய்திருந்தனர்.ராமநாதபுரம் விவேகானந்தா கேந்திர அன்பர்கள் சக்தி ஸ்தோத்திரம், பாராயணம், நாமாவளி, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவைநிகழ்த்தினர். ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிேஷக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிேஷக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !