விருதுநகர் கோயில்களில் அணையா விளக்கு
ADDED :2621 days ago
விருதுநகர்:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்திற்கு பின், தமிழக கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு இந்துசமய அறநிலைத்துறை தடை விதித்தது. பாதுகாப்பு இல்லாத இடங்களில் விளக்கு ஏற்றுவதால் விபத்துக்கு வழி வகுக்கும் என்பதால் விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் நெய், எண்ணெய் ஊற்றி வழிபடலாம். பக்தர்கள் ஊற்றும் நெய், எண்ணெய் கீழே உள்ள சேமிப்பு கலனில் சேகரிக்கப்படும்.மேலே உள்ள கலனில் தீர்ந்த பின் கீழே உள்ள சேமிப்பு கலனிலிருந்து வரும் நெய் , எண்ணெய் மூலம் அணையாமல் தீபம் எரிகிறது. இவ் விளக்கு வெயிலுகந்தம்மன் கோயில்,பராசக்தி மாரியம்மன் கோயிலிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஆடிபெருக்கு என்பதால் அணையா விளக்கில் பெண் பக்தர்கள் எண்ணெய்,நெய் ஊற்றி வழிப்பட்டனர்.--