காலவாக்கம் சின்னம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ADDED :2620 days ago
திருப்போரூர்:காலவாக்கம் சின்னம்மன் கோவிலில், 20ம் ஆண்டு ஆடி திருவிழா, பால்குட விழாவுடன் நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த காலவாக்கம் கிராமத்தில், பழமையான சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 20ம் ஆண்டு ஆடித்திருவிழா, நேற்று பால்குட விழாவுடன் துவங்கியது. இதை ஒட்டி அப்பகுதி அங்காளம்மன் கோவில் அருகே இருந்து பக்தர்கள், பால் குடத்துடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். பிரதான விழாவாக, நாளை மாலை, 4:00 மணிக்கு, கூழ் வார்த்தலும், நாளை மறுநாள், 6:00 மணிக்கு, தீ மிதி விழாவும், 6ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர் செய்கின்றனர்.