சுவடிகளுக்கு மலர் வழிபாடு
ADDED :2621 days ago
பழநி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பழநி மலைஅடிவாரம் போகர் புலிப்பாணி ஆசிரமத்தில், போகர், புலிப்பாணி சித்தர்கள் காலத்து ஓலைச்சுவடிகளுக்கு மலர் வழிபாடு நடந்தது. பழநி போகர் புலிப்பாணி ஆசிரமத்தில், பலநுாறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் போகர், புலிப்பாணி ஆகியோர் எழுதிய சித்த மருத்துவம், ஜோதிடம் உள்ளிட்ட குறிப்புகள் அடங்கிய பழங்கால ஓலைச்சுவடிகள் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். நேற்று ஆடிப்பெருக்குவிழாவின்போது உலகஅமைதி, இயற்கைவளம் பெருக வேண்டி, போகர்சித்தர், ஓலைச்சுவடிகளுக்கு மலர்வழிபாடு, யாகபூஜைகள் நடந்தது.