உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரியில் ஆடி கிருத்திகை விழா

சிறுவாபுரியில் ஆடி கிருத்திகை விழா

கும்மிடிப்பூண்டி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சிறுவாபுரியில் பக்தர்கள் குவிந்ததால், முருகனை தரிசிக்க நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று, ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


அதிகாலை முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க சென்றனர். கோயம்பேடு, செங்குன்றம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, கோவில் குளத்தில் நீராடி, முருகனை தரிசித்தனர்.நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்து வழிபட்டனர்.  அதிகாலை சிறப்பு அபிஷேகத்திற்கு பின், விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவரை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வண்ண மலர் அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !