மேலமுந்தலில் சப்த கன்னியர் பூஜை
ADDED :2665 days ago
வாலிநோக்கம்: மேலமுந்தல் கடற்கரையோர கிராமத்தின் அருகே உள்ள தாழையடி ஏழு பிள்ளைக்காளியம்மன் கோயிலில் ஆடி மாத சப்த கன்னியர் பூஜை நடந்தது. உலக நன்மைக்காக இரவில் 108 விளக்கு பூஜையும், அக்னி சட்டி, மாவிளக்கு, பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளைபக்தர்கள் நிறைவேற்றினர். மறுநாள் காலை பொங்கல் வைத்து, கிராமத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமியர்களை அம்மனாக பாவித்து பூஜை செய்யப்பட்டது. காளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீரால் அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.