உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்வர் யாத்திரீகர்களுக்கு முஸ்லிம் அமைப்பு உதவி

கன்வர் யாத்திரீகர்களுக்கு முஸ்லிம் அமைப்பு உதவி

முசாபர் நகர் : உத்தர பிரதேச மாநிலத்தில், கன்வர் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை, முஸ்லிம் அமைப்பினர் செய்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில், ஆண்டுதோறும் நடக்கும் கன்வர் யாத்திரையில், லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, கங்கோத்ரியின் கோ முக் மற்றும் ஹரித்துவாரில் இருந்து கங்கை நீரை எடுத்து, சொந்த ஊருக்கு வந்து, அங்கு உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி அன்று அபிஷேகம் செய்வது தான், இந்த யாத்திரையின் முக்கிய அம்சம்.

இவ்வாறு கன்வர் யாத்திரை சென்று திரும்பும் பக்தர்களுக்கு தேவையான, உணவு மற்றும் மருத்துவ வசதிகளை, முசாபர் நகரில் உள்ள, ஆவாஸ் - ஏ - ஹக் என்ற முஸ்லிம் அமைப்பினர் செய்து வருகின்றனர். மேலும், பகர்தர்களின் கால்களுக்கு, மசாஜும் செய்கின்றனர். ஆவாஸ் - ஏ - ஹக் அமைப்பின் தலைவர் சதாப் கான் கூறியதாவது: அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, கன்வர் யாத்திரை பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !