உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதபுரீஸ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலம்

பூதபுரீஸ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலம்

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபூதபுரீஸ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் பழமை வாய்ந்த, ஸ்ரீ சவுந்திரவள்ளி உடனுறை ஸ்ரீபூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பல வருடங்களாக சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில், கடந்த 2009ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு மரத்தேர் செய்ய, திருஞானசம்பந்தர் தெய்வ திருப்பணி அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு தேர் திருப்பணி துவங்கப்பட்டு, 27 அடி உயரத்திற்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் தேர் தயார் செய்யப்பட்டது. மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்தபதி புஷ்பராஜ் தலைமையில் ஸ்தபதிகள் தேரை உருவாக்கினர். தேர் திருப்பணி முடிந்து, நேற்றுமுன்தினம் காலை கணபதி ஹோமம், முதல்கால பூஜை, இரண்டாம் கால பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. நேற்று காலை 5.45 மணிக்கு, ஸ்ரீ சவுந்திரவள்ளியுடன், பூதபுரீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். ­­­­­தேரோட்ட விழாவில் ஏரளாளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் தெய்வ திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !