கொளஞ்சியப்பருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
ADDED :5003 days ago
விருத்தாசலம் :விருத்தாசலத்தில் வளர்பிறை சஷ்டி விழாவையொட்டி கொளஞ்சியப்பர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் வளர்பிறை சஷ்டி துவக்க விழா நேற்று துவங்கியது. அதையொட்டி கொளஞ்சியப்பருக்கு மஞ்சள், பால், தேன் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கொளஞ்சியப்பருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.