வெள்ளையம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
ADDED :2663 days ago
கிணத்துக்கடவு: நெகமம் அடுத்த செட்டிக்காபாளையம்,வெள்ளையம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று நடக்கிறது.நெகமம் அடுத்த செட்டிக்காபாளையத்தில் பழமையான வெள்ளையம்மன் கோவில் உள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் குண்டம் விழா நடக்கிறது. நடப்பு ஆண்டின், குண்டம் திருவிழா இன்று நடக்கிறது. முன்னதாக, நேற்று காலை, 7:30 மணி அளவில், கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. காலை, 9:00 மணிக்கு கருப்பராயன் கோவிலுக்கு அம்மன் செல்லுதல், மாலையில் தீர்த்தக்கிணற்றில் இருந்து கும்பம் எடுத்து வருதலும், குண்டம் திறப்பும் நடந்தது. இன்று, (8ம் தேதி)காலை, 9:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிேஷக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மதியம் அன்னதானமும் நடக்கிறது.