உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர உற்ஸவம்: சுவாமி, ஆண்டாள் உலா

திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர உற்ஸவம்: சுவாமி, ஆண்டாள் உலா

திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பெருமாளுடன் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகியும், பாண்டிய தேச பதினெட்டில் ஒன்றாயும், ஆழ்வார்கள் ஐவரால் பாடப்பெற்ற சிறப்பை பெற்றது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் 11 நாட்கள் திருவாடிப்பூர உற்ஸவம் நடைபெறும் விழாவில் தினமும் காலை சுவாமி புறப்பாடும், இரவு வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும். ஆக.,13ல் தேரோட்டமும், ஆக.,14ல் தீர்த்தவாரியும் நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !