மொளசூர் அய்யனார் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :2664 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மொளசூர் பாதாள அய்யனார் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். திண்டிவனம் அருகே மொளசூர் பாதாள அய்யனார் கோவிலில், ஆடிமாத மூன்றாம் திங்கள் திரு விழாவை முன்னிட்டு, வினாயகர், முருகர், பொற்கலை பூரணி மற்றும் அய்யனார் சாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், கொண்டக் கடலை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை சாமிக்கு படையலிட்டனர். வெளியூரில் இருந்து வந்த ஏராளாமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அய்யனார் சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் மண் குதிரை கொண்டுவந்து சாமிக்கு வேண்டுதலை நிறைவேற்ற நேர்த்திகடன் செய்தனர். விழா ஏற்பாடுகளை, மொளசூர் பாதாள அய்யனார் கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.