உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலமங்கலத்தில் கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

நீலமங்கலத்தில் கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு

கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் சிவன் கோவிலில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினமான நேற்று மாலை வழிபாடு நடந்தது. நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்த பின், மலர் மாலை அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின், மறைந்த தி.மு..க., தலைவர் கருணாநிதிக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !