நல்லாத்தூர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா
ADDED :2664 days ago
நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் திரிபுரசுந்தரி கோவிலில் வரும் 13ம் தேதி ஆடிப்பூர விழா நடக்கிறது. ஏம்பலம் அருகே, நல்லாத்துார் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, வரும் 13ம் தேதி ஆடிப்பூர விழா நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 8.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சகஸ்ரநாமம், மகா தீபாராதனை செய்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் நல்லாத்துார் கிராம மக்கள் செய்து வருகின்றனர். திருமணமாகி பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.