ராமேஸ்வரம் கோயிலில் மோட்ச தீபம்
ADDED :2664 days ago
ராமேஸ்வரம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாதுரை நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய வேண்டி நேற்று இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசலில் தி.மு.க., தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து கோயில் ஊழியர் சங்கம் சார்பில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். தி.மு.க, திருக்கோயில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முனியசாமி, கமலநாதன் உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.