நெரூரில் நாத உற்சவ பெருவிழா
ADDED :2611 days ago
கரூர்: நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு நாத உற்சவ பெருவிழா, நேற்று மாலை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பிரபாகரன் குழுவினர் இசையுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதையடுத்து, சாய்சங் கீதாலய இசைப்பள்ளி மாணவர்களின் வீணைக் கச்சேரி, சேலம் அரசு இசைக்கல்லூரி நாதஸ்வர ஆசிரியர் சங்கரனின் நாத சங்கம இசை நிகழ்ச்சி நடந்தது. மதியம் மகாலட்சுமியின் திருமலை பாராயணம், ராமலிங்கத்தின் விளக்க உரை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்கள் பங்கேற்ற, நாத உற்சவ விழா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.