ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று (ஆக.,13) காலை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரவிழா ஆகஸ்ட் 05ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடைபெற்றது. ஆக.9 காலை 10:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவையும், ஆக.11 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோயிலில் ரெங்கமன்னார் சயனதிருக்கோல உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஆக.,13) காலை நடைபெற்றது. தேரோட்டத்தை எம்எல்ஏ சந்திர பிரபா, கலெக்டர் சிவஞானம் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.