ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு 1.08 லட்சம் வளையல் அலங்காரம்
ADDED :2658 days ago
பழநி: ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பழநி பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் 1.08 லட்சம் வளையல்களால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பெண்கள் வளையல், மஞ்சள் குங்குமம் சாத்தி வழிபட்டனர். இடும்பன்கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த அ.கலையம்புத்துார் கல்யாணி அம்மன், கைலாசநாதர் சுவாமி கோயிலில் கணபதி ேஹாமம், கல்யாணி அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது.
பழநி இடும்பன்மலை பின்புறமுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் அங்காள பரமேஸ்வரியம்மன் மற்றும் 30அடிநீளம், 10 அடி அகலமுள்ள மகா பெரியாயி அம்மன் ஆகியோருக்கு ஒரு லட்சத்து எட்டு வளையல்களில் பந்தல், தோரணம், திருமேனி அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் குங்குமம் பிரசாதமாக வழங்கினர். திரளான வெளிமாவட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.