கட்சியில் சேர்ந்த கடவுள்
ADDED :2817 days ago
சாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றுவதற்கு ‘அகடவிகடம்’ என்று பெயர். இதில் கைதேர்ந்தவர் விநாயகர். சக்தியும், சிவனும் ஊடலால் கோபம் கொண்டால் குறும்புசெய்து ஒன்றுசேர்ப்பவர் விநாயகர். காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டி காவிரி நதியை ஓடச்செய்த பெருமைக்குரியவர். சிறுவனாக வந்து விபீஷணனை ஏமாற்றி ரங்கநாதரை காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்தவர். திருக்கோகர்ணத்தில் ராவணனிடம் சாதுர்யமாகப் பேசி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். இவர்செய்த எல்லா விளையாட்டும் நமக்காகத்தான். தனிஉடைமையாக இருப்பதை அனைவருக்கும் உரியதாக்கிய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர் விநாயகர்.