திருநங்கைகள் நடத்திய மாரியம்மன் திருவிழா
ADDED :2612 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், திருநங்கைகள் சார்பில், சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடத்தப்பட்டது. குமாரபாளையம், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், திருநங்கைகள் சார்பில், ஆவணி வெள்ளியையொட்டி திருவிழா நடத்தப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து ஜண்டை மேளதாளங்கள் முழங்க, திருநங்கைகள் பலர் நவசக்தி அம்மன், காளியம்மன் வேடம் அணிந்து, பூங்கரகம், அக்னிச் சட்டி எடுத்தவாறு தீர்த்தக்குட ஊர்வலம் வந்தனர். மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னதானம் மற்றும் கூழ், பிரசாதமாக வழங்கப்பட்டது.