வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம்
ADDED :2609 days ago
வேடசந்துார்: வேடசந்துார் ஆதி பராசக்தி கோவிலில் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். கோவிலில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. செந்நிற ஆடை அணிந்த பக்தர்கள் தாங்கள் கஞ்சிக் கலயத்தில் கொண்டு வந்த கஞ்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மழை வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. செயலாளர் சுப்புலட்சுமி, பொருளாளர் நேரு மாணிக்கம் பங்கேற்றனர்.