புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா
ADDED :2724 days ago
கடலுார்: கடலுார் நாகம்மன் கோவிலில் செடல் பெருவிழாவையொட்டி புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. கடலுார் பஸ் நிலையம் நாகம்மன் கோவிலில் செடல் பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை தீபாராதனைகளும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது. கடந்த 17ம் தேதி செடல் பெருவிழா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். 10ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் புஷ்ப பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.