உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை

ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது. விழாவையொட்டி, மாலை 5:00 மணி முதல் 7:30 மணி வரை 1008 விளக்கு வழிபாடு நடந்தது. இதில், பெண்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின், 108 சங்காபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !