ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றல் வைபவம்
ADDED :1 hours ago
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து வழங்கப்பட்ட பட்டு சாற்றும் வைபவம் நேற்றிரவு கோயிலில் நடந்தது.
புரட்டாசி பிரமோற்ஸவம் ஐந்தாம் திருநாளில் திருமலை திருப்பதி ஏழுமலையான் சாற்றுவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு சாற்றுவதற்கு பட்டு வழங்கப்பட்டிருந்தது. இதனை நேற்று இரவு 7:40 மணிக்கு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் நடந்தது. வெள்ளி குறடு மண்டபத்தில் ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.