ஓம்சக்தி பக்தர்கள் பால் குட ஊர்வலம்
ADDED :2979 days ago
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த, ஒட்டப்பட்டி வள்ளுவர் நகர் ஓம் சக்தி கோவிலில், நேற்று கஞ்சி கலச விழா நடந்தது. இதையடுத்து, வள்ளுவர் நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள், கோவிலில் இருந்து, கஞ்சி கலசம், பால்குடம், தீ சட்டியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து, அம்மனுக்கு கஞ்சி ஊற்றப்பட்டது. முன்னதாக, ஓம்சக்தி அம்மனுக்கு பாலபி?ஷகம் நடந்தது. ஓம்சக்தி பீடம் சார்பாக, பக்தர்களுக்கு, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.