பரமக்குடி கோயிலில் ஆக.29ல் கும்பாபிஷேகம்
ADDED :2651 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆற்று படித்துறையில் சக்திக்குமரன் செந்திலாண்டவர் கோயிலில் ஆக., 29 ல் மகா கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பங்கேற்கவுள்ளார். பரமக்குடி சக்திக்குமரன் கோயிலில் மூலவராக சக்திக்குமரன் செந்திலாண்டவரும், உற்சவர் ஜெயந்திநாதர், ஆறுமுகப் பெருமாள், சனீஸ்வரன், தட்சிணாமூர்த்தி ஆகிய பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் வர்ணம் பூசப்பட்டுகும்பாபிஷேகம் நடப்பதையொட்டி, யாகசாலை பூஜைகள் மகா கணபதி பூஜையுடன் ஆக.26 ம் தேதி துவங்கவுள்ளது. தொடர்ந்து நான்கு கால யாகபூஜைகள், பூர்ணாகுதிக்கு பின்னர், மகா கும்பாபிஷேகம், மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் சுப.இலக்குமணன் தலைமையில் செய்து வருகின்றனர்.